நீங்கள் உறங்கிக்கொண்டு உள்ளீர்கள். நிசப்தமான ஒரு நிமிடம் யாருமில்லா நேரத்தில் உங்கள் அருகில் ஒருவர் நின்றுகொண்டு இருக்கிறார் உங்களை முறைத்துபார்த்தபடி. உறக்கத்தில் சற்று விழித்து அவரை நீங்கள் பார்க்க நேர்ந்தால் உங்கள் உணர்வு எப்படி இருக்கும். அதுவே அவராக(மனிதன்) இல்லாமல் அதுவாக(ஆவி) இருந்தால்..? நினைத்துகூட பார்க்க சிலருக்கு விருப்பம் இருக்காது. கண்களால் காணும் வரை எதுவும் பொய்தான். ஆவி என்பதும் அப்படியே. பொய்யாகி போன மெய்யான ஒரு விஷயம் இந்த ஆன்மாக்கள்.உண்மையில் ஆவிகள் இருக்கிறதா..? ஒரு வேளை இருந்தால் எப்படி இருக்கும். படங்களில் வருவது போல் கொடூரமாக இருக்குமா.? நம் உடலில் புகுந்து நம்மை ஆட்கொள்ளுமா.? போன்ற எண்ணற்ற கேள்விகள் பல காலமாக மக்கள் மனதில் இருக்கிறது என சொல்லலாம். இந்த பதிவு மூட நம்பிக்கைகளை வளர்ப்பதர்க்கோ. ஒரு பயத்தை ஏற்படுத்தவோ அல்ல. .(இதையெல்லாம் எதுக்கு நான் படிக்கணும்) என்று ஒரு எண்ணம் தோன்றினால் அதை தூக்கி எறிந்துவிட்டு இதையும் தெரிந்துகொள்ள நேரம் ஒதுக்குங்கள்.
Get Ready
அந்நியன் திரைப்படத்தில் வருவது போல் நரகம் என்பது உண்மையில் இருக்கிறதா என்பதே இன்று புதிரான கேள்வி.கருடபுராணம் போன்ற நூல்களில் நரகத்தை பற்றி சில விஷயங்கள் உண்டு. மேலும் அங்கு ஒளியே கிடையாது என்றும் செய்த பாவங்களுக்கு ஏற்றாற்போல் தண்டனைகள் தானாக வரும் என்றும் சொல்லபட்டிருகிறது. அப்படியென்றால் ஆவி,பேய்கள் எப்படி உருவாகின்றன. உண்மையிலையே அது கட்டு கதையா..? அல்லது நரகம் எனபது கட்டுகதையா.? பதிலை கண்டறிவது சற்று சிரமம். சில ஆண்டுகளுக்கு முன்பு நியூசிலாந்து நாட்டில் உள்ள ஒரு அரண்மனைக்கு சில சுற்றுலா பயணிகள் சென்றுகொண்டு இருந்தபோது அவர்களுடன் வந்த நாய்கள் அந்த அரண்மனைக்கு செல்லும் வழியில் உள்ள ஒரு பாலத்திற்கு வந்தவுடன் தானாக பாலத்தில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்துகொண்டதாம். தொடர்ந்து சில நாட்களாக அந்த வழியில் வந்த நாய்கள் அனைத்தும் குதித்து இறந்து போனதாம். இதை பற்றி ஆராய தொடங்கிய சிலர் ஒவ்வொரு கருத்தாக முன் வைத்தனர்.அந்தபாலத்திற்கு அடியில் நாய்களை கவரும் வகையில் ஒரு திரவத்தின் வாசம் தானாக ஏற்படுகிறது என்றும், சில காலத்திற்கு முன் மந்திரிக்கபட்ட விலங்குகள் அங்கு சாகடிக்கபட்டதால் ஒரு விதமான சாபம் அந்த பாலத்திற்கு என்றும் அதனாலையே நாய்கள் இறக்கிறது என்றும் கூறுகின்றனர். இருப்பினும் பல ஆய்வுக்கு பின்னும் அந்த மர்மம் மர்மமாகவே உள்ளது. இறந்த விலங்குகளும் ஆவிகளாக அங்கு சுற்றுகிட்றது என்றும் சில சமயம் அந்த வழியே செல்பவர்களுக்கு நாய்கள் குறைக்கும் சப்தம் கேட்கிறது என்றும் சில தகவல் உண்டு. சரி விலங்குகளே ஆவிகளாக சுற்றுகின்றது என்றால் மனிதர்கள் மட்டும் என்ன விதிவிலக்கா. ஒரு மனிதன் இறந்த பின் என்னவாகிறான். உடலில் இருந்து உயிர் பிரிந்தவுடன் அது எங்கே செல்கிறது. இறந்துபோய் சிறிது நேரத்தில் உயிருடன் வந்த சிலர் கூறியது இதைதான் நான் மெல்ல மேலே பறப்பதை உணர்ந்தேன். என் உடலை 3 நிமிடத்திற்கு பார்த்துக்கொண்டே மிதந்திருந்தேன். புது பலம் கிடைத்தது போல் உணர்ந்தேன். பின் ஒரு வெள்ளை ஒளி என்னை இழுக்க தொடங்கியது. அதன் அருகில் செல்ல செல்ல ஏதோ ஒரு மௌன ஒலி எனக்கு கேட்க தொடங்கியது. அந்த ஒளி என்னை அணைத்துகொண்டது போல் இருந்தது. பின் மீண்டும் என் உடல் அருகில் இருந்தேன் சட்டென என் உடலுக்குள் புகுந்துவிட்டேன். (கேட்கறதுக்கு நல்ல இருக்கில்ல) இறந்து மீண்டும் உயிர்கொண்ட பலரும் அதே தகவலை முன் வைத்தனர். 1923-ம் ஆண்டு லண்டனில் mr.பிராட் கண்டைசன் என்ற மருத்துவர் இறந்து பிழைத்த அனுபவத்தை பலரிடம் பகிர்ந்துள்ளார். ஆவி,பேய்கள், அவைககளுக்கு என்ன வித்தியாசம்..? ஒருவருக்கு சாதாரண ஒரு மரணம் ஏற்பட்டாலோ , விருப்பபட்டு தற்கொலையோ செய்துகொண்டாலோ அவர்கள் ஆவிகளாக சுற்றுகின்றனர். ஒரு வித விபத்தில் இறப்பவரோ, நிறைவேறாத ஆசையில் இறப்பவரோ அவர்கள் பேய்களாக சுற்றுகின்றனர்.(சிலர் காதில் பூ சுற்றுவதாக நினைத்தால் நிர்வாகம் பொறுப்பல்ல)தமிழ்நாட்டிலே அப்படி பட்ட கதைகள் கட்டப்பட்ட சில இடங்கள் உண்டு...அந்த இடங்களில் காலம் காலமாக பேய்கள் இருப்பதாக நம்புகின்றனர்.சென்னையில்ஆவிகளை பற்றி ஆராய ஒரு நிறுவனமே உள்ளது. நாம் நம்பப்படும் கடவுள்களே எலியன் என்று சொல்லும் சில ஜாம்பவான்கள் பேய்களை மட்டும் உண்மையில் இருப்பதாக கருத்து தெரிவித்துள்ளனர். எதுவாயினும் ஆவிகள் பற்றிய ஆய்வு பல இடங்களில் இன்னும் நடந்துகொண்டுதான் இருக்கிறது. நடக்கட்டும்.
மீண்டும் வருகிறேன்-கபில்தேவ்
إرسال تعليق