குட்டி(2001) - பார்க்க வேண்டிய படம்





                 ஏதாவது நல்ல திரைப்படம் பார்போம் என்று தேடிக்கொண்டு இருந்தபொழுது ஒரு புத்தகத்தில் படித்தேன் குட்டி எனும் திரைப்படம் பற்றி(தனுஷ் நடித்த குட்டி அல்ல. 2001 இல் தமிழ் சினிமாவில் மைல்கள் படமாக வந்த ஒன்று. மசாலா படங்களையும், காமெடி படங்களையும் பார்த்து வெறுத்துப்போன சிலருக்கு இப்படம் நிச்சயம் பிடிக்கும். சொல்ல வந்திருக்கும் கதை தினமும் நம்மை சுற்றி நடக்கும் ஒன்றுதான். குட்டி திரைப்படத்தில் வரும் நடிகர்கள் அனைவரும்  கதாபாத்திரங்களாக மாறி வாழ்ந்துகாட்டிவிட்டு சென்றுள்ளனர். ரமேஷ் அரவிந்த்,கௌசல்யா,ஈஸ்வரி ராவ்,விவேக், நாசர். போன்ற அனைவரும் தங்கள் நடிப்பின் மறு பரிணாமத்தை காட்டிய படம்.  
  
கதை

கண்ணம்மா எனும் குட்டி தனது கிராமத்தில் பெற்றோர்களின் செல்ல மகளாக வளர்க்கப்படுகின்றாள். இடையே அவளின் தந்தை விபத்தில் இறந்து போகிறார். நகரத்தில் வேலை ஒன்று இருப்பதனை அறியும் இவளின் தாயாரின் சொற்கேட்டு அங்கு ஒருவரின் வீட்டில் பணிப்பெண்ணாக வேலைக்கு அமர்த்தப்படுகின்றாள். அங்குதான் கதை தொடங்குகிறது. குட்டியாக நடித்திருக்கும் பெண். பி.சுவேதா.(சில்வர் லோட்டஸ் விருது- சிறந்த குழந்தை நட்சத்திரம்) நம்மை படம் முடிந்த பிறகும் கண்கலங்க வைக்கிறாள் என்பதே உண்மை. தன் நிலையை விவேக்கிடம் சொல்லும்போதும், வீட்டில் பயந்து நடுங்கும்போதும், பார்ப்பவர் கண்கள் கலங்கிதான் தீரும். படத்தின் இறுதி காட்சி ஒன்று போதும்....கண்ணம்மாவை போல் எத்தனை பேர் இருப்பார்களோ என எண்ண வைக்கிறது.  இளையராஜாவின் இசை நம்மை ஆரம்பத்திலேயே படத்திருக்குள் ஒன்ற வைத்துவிடுகிறது.முதலில் சொன்னது போல் நல்ல படம் பார்க்க ஆசைபடும் சிலர் நிச்சயம் இந்த இப்படத்தை பார்க்கலாம். சினிமா வரலாற்றில் நிச்சயம் குட்டிக்கும் ஒரு இடம் இருக்கும்.  என நம்புகிறேன். (youtube-ல் காண கிடைக்கிறது).


அடுத்த பதிவில் சந்திக்கிறேன்-கபில்தேவ்

Post a Comment

أحدث أقدم