மரணமில்லா ஏலியன் உலகம்



                                       



இந்த கட்டுரை தொடங்கும் முன்பு சில வலைதளங்களையும்,புத்தகங்களையும் படித்தேன். கிட்டத்தட்ட சில விஷயங்கள் ஒரே மாதிரி சொல்லப்பட்டு இருந்தன. ஏலியன்கள் மற்றும் மனிதர்கள் இவர்களுக்கு இடையே என்ன தொடர்பு உள்ளது என்று நம்மால் யூகிக்க முடியுமா. ஒரு வேலை அதற்க்கு விடை கிடைத்தால் ஏலியன் ஏன் அடிக்கடி நம் பூமிக்கு வருகின்றன என்பதை நிச்சயம் புரிந்துகொள்ள முடியும். 1913-ம் ஆண்டு லண்டன் நகரில் வெளியான ஒரு பத்திரிகையில் ஏலியன் பறக்கும்தட்டு புகைப்படம் முதன்முதலாக வெளியானது. அதை பார்த்த்த சிலர் இது என்னவாக இருக்க கூடும் என எண்ணினார். அதை தொடர்த்து,இஸ்ரேல்,USA,கொரியா,நியுசிலாந்து போன்ற நாடுகளில் 2 வருடங்களுக்கு 1 முறையாவது பறக்கும் தட்டு புகைப்படங்களும்,வீடியோக்களும் இன்றுவரை வெளிவந்துகொண்டே இருக்கின்றன. சிலர் அதை போலி என்று சொன்னாலும் சிலர் உண்மை என்றே ஒப்புகொள்கின்றனர். சரி ஏலியன் ஏன் பூமிக்கு வருகின்றன..? இந்த கேள்விக்கான விடை நம் நாட்டில்கூட இருக்கின்றன. நாம் தொலைத்துவிட்ட குமரிக்கண்டத்தில்(கடலில் மூழ்கிவிட்டது) அதற்கான விடை பரிசோதிக்கபட்டது. அதில் கிடைத்த கல்வெட்டுக்களில் ஏலியன் மற்றும் மனிர்கள் ஒன்றாக நிற்கும் சிற்பங்கள், ஏலியனை கடவுளாக தொழும் மனிதர்கள், மற்றும் ஏலியன்களின் பல ஆதாரமிக்க வடிவங்கள் ஆகியவை கிடைக்கபெற்றன. அதே போன்று சில கல்வெட்டு எகிப்தில் கண்டறியப்பட்டுள்ளது. ஆயினும் இன்னும் அதற்கான காரணம் முழுமையாக நிரூபிக்க படவில்லை. சில மேதவிகள் இப்படி ஒரு கருத்தை முன் வைத்தனர். அதாவது மனிதன் குரங்காக இருந்தபொழுது பூமிக்கு வந்த ஏலியன்கள் அவர்களிடம் உடலுறவு கொண்டதாகவும் அதில் இருந்தே மனிதன் பரிணாம வளர்ச்சி அடைந்ததாகவும். அதனால்தான் மனிதனையும்,பூமியையும் ஆராய அடிக்கடி பூமிக்கு ஏலியன் வருவதாகவும் சொல்கின்றனர். இந்த கருத்து இன்றளவும் உலவிகொண்டு இருக்கிறது. நாசாவே இதை மறுக்க மறுக்கிறது. நாசாவில் ஏரியா 51-ல் ஒரு பறக்கும்தட்டு இன்றும் நிறுத்தப்பட்டு இருக்கிறது. இதற்கான புகைப்படங்களும் ஆதாரத்துடன் நிருபிக்கப்பட்டுள்ளது. சரி படங்களில் வருவது போல் ஏலியன்கள் பூமியை தாக்குமா.? இதற்கான விடை ஆம் என்றே சொல்கின்றது நாசா மற்றும் சில வான் ஆராய்ச்சி நிலையங்கள். சரி நம் நாட்டில் பறக்கும்தட்டு வந்துள்ளதா.? ஆம் வந்துகொண்டுதான் இருக்கிறது.ஆனால் நாம் அதை கடவுளாக ஏற்றுகொண்டோம் என்பதே உண்மை. உதாரணம் நம் கோவில் கோபுரங்களில் இருக்கும் கலசம்... நாஸ்காவில் இருக்கும் ஒரு பிரமிடில் கிடைக்கபெற்ற கல்வெட்டில் ஒரு பறக்கும் தட்டு கண்டுபிடிக்கப்பட்டது அதன் உச்சியில் கோவில் கோபுரத்தில் இருப்பதுபோன்ற கலசம் செதுக்கட்டுள்ளது. அதை தொடர்ந்து இன்றுவரை கண்டேரியபட்ட அனைத்து பறக்கும்தட்டிலும் கலசவடிவ பொருள் அமைக்கப்பட்டு உள்ளது. நம் முன்னோர்கள் ஏலியனை கடவுளாக வழிபட்டனர். அவர்கள் விட்டுச்சென்ற பறக்கும்தட்டை கோவில்களாக பாவித்து வழிபட்டனர். அதுவே பின்பு கோவில்களாக செயற்கையாக வடிவமைக்க பட்டன. இன்றுவரை ஏலியன் என்பது ஒரு புதிர்தான். ஏலியன் பற்றி மதன் அவர்கள் எழுதிய மனிதனும் மர்மங்களும் புத்தகத்தில் சில நிகழ்வுகள் குறிப்பிடபட்டுள்ளன. சிறிது வருடங்களுக்கு முன்பு நாசா வெளியிட்டதாக சொல்லி ஒரு வீடியோ வெளியானது. அதில் சூரியனில் மையத்தில் ஒரு கதவு திறப்பதுபோலவும் அதனும் ஒரு உருவம் வெளியே இருந்து உள்ளே செல்வது போலவும். பின் மீண்டும் அந்த கதவு மூடிகொல்வது போலவும் இருந்தது. அதை ஆராய்ந்த சிலர் எந்த கம்ப்யூட்டர் கிராபிக்ஸ்ம் இதில் இல்லை என்றும் நிச்சயம் இது உண்மைதான் என்றும் அடித்து சொன்னார்கள். பின் அந்த ஆராய்ச்சி பாதியிலையே நிறுத்தப்பட்டு விட்டது(உள்நாட்டு சதியா இருக்குமோ) அதை பற்றி நாசாவும் எந்த கருத்தும் கூறவில்லை.
உலகம் முழுவதும் ஏலியன் பற்றிய ஆராய்ச்சி நடந்துகொண்டுதான் இருக்கின்றன அதே வேளையில் எங்கோ ஒரு இடத்தில் ஏதோ ஒரு பிரபஞ்சத்தில் மனிதன் பற்றிய ஆராய்ச்சியை ஏலியன்கள் தொடர்ந்துகொண்டு இருக்கின்றன.


மீண்டும் சிந்திப்போம்-கபில்தேவ்    

Post a Comment

Previous Post Next Post