80's cinima-கடவுளின்நண்பன்

    


ரஜினிகாந்த்,கமல்ஹாசன் என்ற இருபெரும் நட்சத்திரங்கள் இன்று தமிழ் சினிமாவில் உச்சநிலையில் இருப்பதற்கு துவக்க காலம் எண்பது காலகட்டத்தின் ஆரம்பம் என்று சொல்லலாம். ஒவ்வொரு பண்டிகைக்கும் தனது திரைப்படங்களை தவறாமல் வெளியிட்டு அதில் வெற்றியும் அடைந்தனர். இவர்களின் படம் என்றால் நிச்சயம் பார்க்கலாம் என்ற முடிவில் மக்கள் கூட்டம் கூட்டமாக  திரையரங்கிற்கு படை எடுத்தனர். இந்த நிலை இன்று வரை தொடர்கிறது. அதே காலகட்டத்தில் இவர்களுடன் விஜயகாந்த்,ராமராஜன்,கார்த்திக்,சரத்குமார்,சத்யராஜ்,பிரபு,T-ராஜேந்தர் போன்ற புகழ்பெற்ற நடிகர்களும் வெற்றியுடன் வளம் வந்துகொண்டிருந்த நேரத்தில் இவர்களுக்கும் மேல் இருமடங்கு வெற்றியுடன் திகழ்ந்தவர் நடிகர் திரு.மோகன் அவர்கள். மூடுபனி திரைபடத்தில் தொடங்கி(புகழ்பெற்ற படம்-கிளிஞ்சல்கள்) பல எண்ணற்ற திரைப்படங்களில் தன் வெற்றியை பதித்தார்.
ஒரே வருடத்தில் கிட்டத்தட்ட 19 திரைப்படங்களில் நடித்த பெருமை இவருக்கு எப்பொழுதும் ஒன்று.இப்பொழுதெல்லாம் ஒரு நடிகரின் ஒரு படம் வெள்ளிவிழா காண்பதே புதிரான ஒரு விஷயம். தொடர்ச்சியாக 5 வெள்ளிவிழா திரைப்படங்களை தந்து ஆச்சர்யத்துடன் திகழ்ந்தார் மோகன் அவர்கள். தமிழ்,தெலுங்கு,கன்னடா,மலையாளம் போன்ற திரைப்படங்களிலும் தன் திறனை வெளிகாட்டியவர். அன்றைய சாக்லேட் பாய் அந்தஸ்த்தை பெற்ற சிறந்த நடிகர் என்றே சொல்லலாம். அவரின் படம் என்றால் பெண்கள் கூட்டம் அதிகம் வரும் என்று பெண்களுக்காக மட்டுமே சிறப்பு காட்சி வைக்கப்பட்டதாம். வில்லன் கதாபாத்திரத்தில் தொடங்கி எல்லா கதாபாத்திரங்களையும் திறம்பட வெளிகாட்டிய நடிகர்.1982 ல் வந்த பயணங்கள் முடிவதில்லை படத்திற்காக சிறந்த நடிகர் பட்டதை filmfare இவருக்கு வழங்கியது(300 நாட்கள் ஓடியது) நூறாவது நாள் திரைப்படம் பார்த்தவர்கள் நிச்சயம் மோகனை சிறந்த நடிகர் என்றே ஒப்புகொள்வார்கள். அந்த சைகோ கதாபாத்திரத்தை அசால்ட்டாக பின்னியிருப்பார். சிறந்த திர்ல்லர் திரைப்படங்களில் அதுவும் ஒன்று. விதி திரைப்படத்தில் இன்னொரு பரிமாணத்தை திரையில் காட்டியவர். அந்த படத்தில் அவருக்கு வில்லன் வேடம்(பெண்ணை ஏமாற்றியவன்) அனால் அந்த படம் வெளிவந்த பிறகு அவருக்கு பெண் விசிறிகள் அதிகமாயினர் என்பது வேறு கதை. பல படங்களில் மைக் பிடித்தபடியே பாடியதால் இவருக்கு மைக் மோகன் என்ற அடைமொழியும் உருவானது. அன்றைய காலேஜ் விடலைகள் மேடையில் பாடல் பாடுகையில் இவரது ஸ்டைல்லை follow செய்தனர் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.இவரது படங்களில் வரும் பாடல்களுக்காகவே சிலபடங்கள் தாறுமாறாக ஓடியது. ரஜினி கமல் படங்கள் வெளியிடும் நேரத்தில் தனது படங்களை வெளியிட பயந்தவர் T-ராஜேந்தர். ஆனால் மோகன் படம் வெளியாகும் அன்று தன் படங்களை வெளியிட பயந்தவர்கள் ரஜினி கமல். அப்படி ஒரு அந்தஸ்தில் திகழ்ந்தவர் மோகன். 90 களின் இறுதிவரை வெற்றிமாலை சூடிய அவர் 91-ல் உருவம் என்ற பேய் படத்தில் நடித்தார். என்னதான் அவர் உச்சத்தில் இருந்தாலும் பலபடங்களில் அவருக்கு குரல் கொடுத்தவர் திரு.ராஜசேகர் அவர்கள். உருவம் திரைப்படத்தில் அவரது சொந்த குரல் வெளிப்பட்டது. அன்று வரை பார்த்த மோகனுக்கும் அந்த படத்தில் பார்த்த மோகனுக்கும் சில வேறுபாடுகள். கோரமான முகத்துடன் தோன்றிய மோகனை ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை. சிலர் அவருக்கு எய்ட்ஸ் நோய் வந்துவிட்டதாக வதந்தி கிளப்பினர். அன்று முதல் அவரது திரைவாழ்க்கை அஸ்தமனம் அடைந்தது. அதற்க்கு பின் அவரது பெயரை திரைத்துறை மறந்தே விட்டது எனலாம். பின் நடித்த மீதி 7 படங்களும் கண்ணிர்க்கே எட்டாதது வேறு தகவல். தொடர்ந்து 14 வருடங்களாக ஸ்டார்ட்-கட் கேட்டுகொண்டே இருந்த அவரது காதுகள் இன்று சமாதானமாகி இருப்பது பரிதாபப்படவேண்டிய ஒன்று. ஆயினும் தொடர்ந்து இன்றும் அவர் வந்துகொண்டே இருந்திருந்தால் நிச்சயம் ரஜினிகாந்த்திற்கே சாவல் விட்டுக்கொண்டு படங்களை தந்திருப்பார். எதுவாயினும் மறக்கமுடியாத,மறைக்கமுடியாத ஒரு நடிகர் திரு.மோகன் அவர்கள்.  

Post a Comment

Previous Post Next Post