சினிமாவும் அரசியலும்-புதிய தோரணை

 

(இது என் தனிப்பட்ட கருத்து  மட்டுமே) முதலில் சினிமா ரசிகர்களுக்கு வணக்கம். ஜாதி,மதம்,இவற்றை மறக்கடிக்க செய்யும் ஒரு களம் சினிமா. இருப்பினும். ஜாதி,மதம் இவற்றை கொண்டாட செய்யும் ஒரு களம் அரசியல். இத்தனை ஆண்டுகால சினிமா துறையில் பல கலைஞர்கள் அரசியல் களத்தில் தன் திறனை நிருபித்து உள்ளனர். சிலர் இன்னும் போராடிக்கொண்டு உள்ளனர். சிலர் இருந்த இடமே இல்லாமல் மறைந்துவிட்டனர். அரசியல் மேடையில் ஒரு விஷயத்தை கத்தி மக்களுக்கு புரியவைப்பதை ஒரு திரைப்படம் புரியவைத்துவிடும்(என்னடா இவன் தேவை இல்லாம சொல்லிட்டு இருக்கானேன்னு நீங்க சொல்றது புரியுது) அதே அரசியல் சினிமா நிகழ்வில் இன்று நடந்துகொண்டு இருப்பது ஏற்றுக்கொள்ளமுடியாத ஒரு செயல். ஒரு பக்கம் காவிரி பிரச்சனை,ஒரு பக்கம் சினிமா ஸ்ட்ரைக்,ஒரு பக்கம் ஸ்டேர்லேட் (உங்களுக்கே தெரியும்) பிரச்சனை. இப்படி மாறி மாறி மக்களை இக்கட்டானா சூழலில் வைத்திருபதையே நம் அரசியல் பிரதிநிதிகள் விரும்புகின்றனர். மோடி அரசு GST அமுல்படுத்தாமல் இருந்திருந்தால் இன்று சினிமா ஸ்ட்ரைக் தேவை இல்லை. தேவை இல்லாத விஷயத்தை நிறைவேற்ற சட்டம் போடும் உச்சநீதிமன்றம் கர்நாடகாவிற்க்கு கண்டனம் தெரிவித்து அவற்றை கட்டுபாட்டுக்குள் கொண்டுவந்து இருந்தால் இன்று காவிரி பிரச்சனை இருந்திருக்காது. விவசாயிகள் உற்பத்தி செய்யும் அனைத்து பொருட்களுக்கும் அவர்களே விலை நிர்ணயம் செய்யலாம் என ஒரு சட்டம் கொண்டு வந்து இருந்திருந்தால் இன்று மீத்தேன்,ஸ்டேர்லேட் பிரச்னை இருந்திருக்காது(விவசாயிகள் சொல்வதைத்தான் அரசாங்கம் கேட்கவேண்டும் என்ற நிலை நிச்சயம் வந்திருக்கும்) சாதாரண கட்டவுட்டுக்கு கொடுக்கும் மரியாதைகூட விவசாயிகளுக்கும் மக்களுக்கும் இந்த அரசு ஏன் கொடுக்கவில்லை.

காரணம் மக்களின் மௌனம். அதிகார தோரணையில் சட்டம் தவறான வழியில் மக்களை சென்றடைந்துள்ளது என்பதே இதற்க்கு சாட்சி. EPS அவர்களை முதலமைச்சர் நாற்காலியில் அமரவைத்தது யார். மூலகாரணம் மக்களின் மௌனம் மட்டுமே. ஊடகமும் தன் நிலையை இழந்துவிட்டது பரிதாபப்படவேண்டிய ஒன்று. ஒரு ஊடகமேனும் குரல் கொடுத்து இருந்தால் மீண்டும் election நடந்திருக்கும். யாருமே அதை செய்யவில்லையே. ஒரு தனி நபர் அதை கேட்டால் விரட்டி அடிப்பார்கள். ஒரு ஊரே சேர்ந்து கேட்டால்..? 

(மன்னா....ஒரு ஐடியா மந்திரிகளை அடைத்துவைத்தால் போதும் முதலமைச்சர் ஆகிவிடலாம்) மக்களே தேர்ந்தெடுக்காமல் ஒருவன் ஆட்சி செய்யும் கேடுகெட்ட அரசியல் தமிழகத்தில் மட்டுமே நடக்கும்.! மக்கள் கேட்பதை நம் நாடே தரவில்லை என்றால் வேறு நாடு எப்படி தண்ணிர் தரும்..? இந்த ஆட்சி 50% ஊழல் செய்தால்.வேறு கட்சிக்கு ஓட்டு போடுவோம் என்று இன்னொரு கட்சியை நிறுத்தினால் அவன் 100% ஊழல் செய்கிறான். நமக்கு தெரிந்ததோ 2,3 கட்சிகள் மட்டுமே. அவற்றைவிட்டால் மக்களுக்கும் கதி இல்லை. அவற்றுக்கும் மக்களை விட்டால் கதி இல்லை.நானும் ஏதேனும் புதியகட்சி ஆட்சிக்கு வருமா என்று சில ஆண்டுகளாக காத்திருக்கிறேன். எழவு வந்தவங்கலேதா மாறி மாறி வாராய்ங்க. ஒரு கட்சி தலைவருக்கு சுதந்திர தினம்,குடியரசு தினம் எப்போனுகூட தெரியல பாவம்.(சின்ன வயசுல படிச்சது மறந்துபோகுமா இல்லையா) இன்னொரு கட்சி தலைவருக்கு பேப்பர் பார்த்துகூட பேர் சொல்ல தெரியல. திரு சீமான் அவர்கள் சொல்கின்ற மாதிரி நீயெல்லாம் வெளிநாடு போனாகூடா தமிழ்நாடுன்னு சொல்லிடாத வேற எதாவது நாட சொல்லு. சிரிப்பாங்க.! ஒரு காலத்தில் சினிமா அரசியலை உருவாக்கியது. இன்று அரசியல்தான் சினிமாவை உருவாக்குகின்றது. சமிபகாலமாக சினிமா என்ற தோரணையில் அரசியல் பேசிக்கொண்டு இருக்கிறது. அந்த 50% and 100% இதுலையும் பொருந்தும். MGRயைகொடுத்த அதே சினிமாதான் கருணாநிதியையும் கொடுத்தது. அப்பொழுதெல்லாம் அரசியல் வசனங்கள் திரையில் வரும்பொழுது அதை பேசுபவர் தலைவனாக பார்க்கபட்டார். இப்பொழுது பேசி பாருங்கள்.(இவனும் அரசியல்க்கு வந்துருவானோ) சில பெரிய ஸ்டார்கள் எல்லாம் தற்பொழுது அரசியல் பிரவேசத்துக்கு தன்னை தயார்படுத்திகொண்டு உள்ளனர்.
வரட்டும் வந்தால் நன்றாக இருப்பார்கள் அவர்கள். மக்களின் கதி. திரையில் மது அருந்தும் போதும் சிகரெட் பிடிக்கும் போதும் ஒரு tag line வருகிறது. படம் முடிந்த உடன் பாதி பேர் டாஸ்மாக்தான் செல்கின்றனர். டாஸ்மாக் நிச்சயமாக மூடுவோம்,ஒழிப்போம் என்று சப்தமிடும் எந்த கட்சி தலைவரும் ஆட்சிக்கு வந்த உடன் அதை செய்ததை பார்த்ததில்லை.
1 மாசம் மூடனதுக்கே இவ்ளோ அரசுக்கு நஷ்டம்னு அறிக்கைவிட்ட இந்த அரசும், பஸ் டிக்கெட் விலை உயர்வை கண்டித்து மக்களின் போராட்டத்தை அணுவளவும் மதிக்காத உச்சநீதிமன்றமும்,கேட்டும் கேட்காமல் அமர்ந்திருந்த அரசியல்வாதிகளும் நல்லா இருக்க வாழ்த்துக்கள். இன்றைய சூழ்நிலையில் சினிமாவையும் அரசியலையும் வேறு வேறு பாதையில் பயணிக்க விட்டால் நல்லது.அரசியல் வாதிகள் கொண்டுவராத சில மாற்றங்களை சினிமா துறையினர்கள் கொண்டுவந்து உள்ளனர். ஆனால் அதை சொல்லிக்காட்டி அதை வைத்து அரசியல் செய்வது தவறு. ஒரு நிழல் தலைவனுக்கும் நிஜ தலைவனுக்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளது. அதை சில திரை மேதாவிகள் தெரிந்துகொள்ள வேண்டும். மாற்றங்களை விரும்பும் மக்களிடம் அரசியலை விடுங்கள். அவர்கள் தேர்ந்துக்கட்டும் அவர்களின் தலைவரை. முதலமைச்சர் பதவிக்கு சில விதி முறைகளை கொண்டுவர வேண்டும். அதை மக்கள் முன் செயல்படுத்த வேண்டும். உதாரணத்திற்கு ஒவ்வொரு அரசியல்வாதியும் அரசியல் அல்லது பட்டபடிப்பு படித்துவிட்டுதான் வரவேண்டும் என்று வைப்போம். ஆட்சி மக்களுக்கு பிடிக்கவில்லை என்றால் பதவி விலகவேண்டும் என்பதை வைப்போம்.! ஏற்றுகொள்ள தயாரா யாரேனும். ஏதாவது மாற்றம் நிச்சயம் வருமா..? பணக்கட்டுக்கு மட்டும்தான் அரசியல் என்பது இருக்கும்வரை நாடு இப்படியேதான் இருக்கும். ஒவ்வொரு தேவைக்கும் நாமேதான் இறங்கி போராடவேண்டி இருக்கும். ஏதேனும் மாற்றத்தை கொண்டுவர செய்வோம் .! இணைந்து போராடுவோம் முடியும் வரை.


மீண்டும் வருவேன்-கபில்தேவ்          

Post a Comment

أحدث أقدم