'சில சமயங்களில்' விமர்சனம்-ஒரு நல்ல திரைப்படம்



மே 1-2018-ல் Netflix-ல் பிரியதர்ஷன் இயக்கத்தில் வெளிவந்து இருக்கும் திரைப்படம் சில சமயங்களில்.நேற்று netfilx-ல் இத்திரைப்படத்தை பார்த்தேன்.எய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வு படமாக அமைந்திருக்கும் இப்படத்தில் ஒரு சில கதாபாத்திரங்களில் 7 கதாபாத்திரங்கள் மட்டுமே கடைசி வரை நம் கண் முன் நடமாடுகிறது. படம் முழுக்க ஒரு மருத்துவமனையில் மட்டுமே நடக்கிறது. பண பிரச்சனையால் தவிக்கும் ஒரு பெண்,வன்புணர்ச்சிக்கு ஆளாக்கப்படும் ஒரு பெண்,வாழ ஆசைப்படும் ஒரு இளைஞன்,குடும்பம் மட்டுமே உலகமென நினைக்கும் ஒரு வயதானவர் என அவரவர்கள் நிஜ கதாபாத்திரமாகவே வாழ்கின்றனர். லஞ்சம் கொடுத்து உதவி கேட்கும் மனப்பான்மை நம்மில் பலருக்கு உண்டு அந்த விஷயம் இதில் சொல்லப்பட்டு இருக்கும் நேர்த்தி நம்மை அனுதாப பட வைக்கிறது. இசை நமது இளையராஜா அவர்களே. படத்தின் இறுதி காட்சியில் 1 நிமிடத்திற்கு வரும் bgm ஒன்று போதும். இளையராஜா இளையராஜாதான். ஒவ்வொருவரது அறிமுகமும் சரி. அவர்கள் ஒன்றாக சேர்ந்து பேசும்போதும் சரி,கடைசியில் அவர்களின் செயல் விளக்கமும் சரி நம்மை சில்லிடவைக்க தவறவில்லை. எதிர்பார்க்காத இறுதிகாட்சி நம்மை உச் கொட்ட வைக்கிறது. திரைப்படத்தின் கதையை நான் சொல்லாததற்கு காரணம் நீங்கள் இப்படத்தை பார்ப்பீர்கள் என்ற நம்பிக்கையில் மட்டுமே.ஒரே ஒரு சோகமான நிகழ்வு என்னவென்றால் இந்த படம் ஏன் தியேட்டர்ரில் வெளியாகவில்லை என்பதுதான்.
1 மணி நேரம் 45 நிமிடங்களே ஓடும் இப்படம் நிச்சயம் நம்மை யோசிக்க தூண்டும் என்பதில் சந்தேகமில்லை. ஒரு நல்ல திரைப்படத்திற்காக காத்திருக்கும் சிலர் நிச்சயமாக இந்த திரைப்படத்தை பார்க்கலாம்.

Post a Comment

Previous Post Next Post