இரும்புத்திரை விமர்சனம்-அடுத்தது என்ன? 




உலகம் முழுவதும் 11-5-2018-ல் வெளியாகி இருக்கும் திரைப்படம் விஷால்,சமந்தா,அர்ஜுன் நடிப்பில் அறிமுக இயக்குனர் P.S.மித்ரன் இயக்கி இருக்கும் திரைப்படம் இரும்புத்திரை. படம் ஆரம்பித்த சிறிது நேரத்திலையே இது விஜய்,அஜித் போன்ற பெரிய நடிகர்கள் நடிக்கவேண்டிய படம் என்று தோன்றும் அதை தாண்டி நிச்சயம் படம் பார்க்கும் மக்களை சிறிது சிந்திக்க வைக்கும் என்பதில் சந்தேகமில்லை

கதை - army ஆபீசர் விஷால் சற்று கோபக்காரர் எனவே army அவரை மெடிக்கல் கவுன்சலிங் சென்றுவிட்டு வருமாறு கட்டளையிடுகிறது. எனவே கவுன்சலிங்காக ஹாஸ்ப்பிடல் செல்கிறார் அங்கு டாக்டர் நம் சமந்தா.அவர்தான் கவுன்சலிங் தரபோகிறவர்.முதலில் வெறுத்தாலும் பின் சமந்தாவிடம் சமாதானம் ஆகிறார் விஷால். விஷாலை சொந்த ஊருக்கு சென்றுவிட்டு வருமாறு கூறும் சமந்தா அவர் சென்று விட்டு வந்தால்தான் கவுன்சலிங் முடித்து கையெழுத்திட முடியும் என்று சொல்கிறார். அதை ஏற்றுகொண்ட விஷால் சொந்த ஊர் செல்கிறார்(சிறு வயதிலேயே அப்பாவிடம் கோவித்துக்கொண்டு ஊரை விட்டே சென்றுவிடுகிறார் விஷால்) மீண்டும் ஊருக்கு வரும் விஷால் எல்லோரிடமும் பழக ஆரம்பிக்கிறார். ஒரு சமயம் தங்கையின் காதல் பிரச்சனை விஷாலுக்கு தெரியவர தங்கை திருமணதிற்கு 10 லட்சம் தேவைப்படுவதை உணர்கிறார். தன் அம்மாவின் நிலத்தை விற்று 4 லட்சம் தன் அப்பாவிடம் ஏற்பாடு செய்ய சொல்கிறார். மீதி 6 லட்சம் loan வாங்க எல்லாம் பேங்க்-ம் அழைகிறார் எங்கும் கிடைக்கவில்லை. அந்நேரம் பேங்க் வெளியே கடை வைத்திருக்கும்  loan ஏஜென்ட் loan வாங்க ஐடியா தர அதை முதலில் மறுக்கும் விஷால் தன் அப்பாவின் பேச்சால் பின் ஒப்புகொள்கிறார்.loan ஏஜென்ட் சொன்னதுபோல் பொய் சொல்லி பேங்க-ல் loan பெறுகிறார்.loan ஏஜென்ட்க்கு  10% கமிஷன்.அதை செக்காக தரசொல்லி வாங்கி கொள்கிறார். சிறிது நேரம் கழித்து விஷாலின் அப்பா  ATM-ல் 5000 ரூபாய் எடுக்க செல்கிறார் ஆனால் பணம் வரவில்லை.குழம்பிபோன அவர் விஷாலிடம் சொல்ல மீண்டும் விஷால் ATM செல்ல அப்பொழுதுதான் தெரிகிறது தன் பேங்க் account-ல் இருந்த 10 லட்சம் மொத்த பணமும் காணாமல் போய்விட்டதென்று. கதையே இங்க இருந்துதான் தொடங்குது. அந்த பணம் என்ன ஆனது அதற்க்கு காரணம் யார். மீண்டும் பணம் கைக்கு வந்ததா என்பதை cyber crime திர்ல்ல்ர்-ஆக விறுவிறுப்பாக சொல்லி இருக்கிறார் இயக்குனர். கதையின் சின்ன சின்ன விஷயங்களுக்கு கூட மெனக்கெட்டு இருக்கிறார் இயக்குனர். தற்பொழுது நிகழும் டிஜிட்டல் இந்தியாவின் அழிவை அழுத்தமாக சொல்லி  இருக்கிறார். and மொத்த கதையையும் தாங்கி பிடிக்கிறார் விஷால் என்று நினைத்தால் நாங்களும் வருவோம்லனு action king அர்ஜுன் செம என்ட்ரி கொடுக்கிறார். "இங்க திருடனுக்கு தேள் கொட்டுனா பொத்திகிட்டு இருக்கணும்.நீங்க திருடங்க நான் தேளு நான் கொட்டுனா பொத்திகிட்டு இருக்கணும்' என்று சொல்லும் இடமாகட்டும். போலீஸ் ஆபீசர்ரிடம்"நீ இப்போ கால் கட் பண்ணலைனா ஒவ்வொரு செகண்ட்க்கும் உன் account-ல இருந்து 10000,10000 ரூபா போயிட்டே இருக்கும் போன வைடா தேரிக்க" என்று சொல்லுவதாகட்டும் படத்தின் மாஸ்டர் பீஸ் அர்ஜுன் மட்டுமே. அதை தாண்டி படத்தில் சொல்லவந்து இருக்கும் விஷயம்"ஆதார் கார்டு,டார்க் நெட்,secret camera,------------browser, போன்றவை பற்றிய குறிப்புகள் நம்மை அதிர்ச்சி அடைய செய்கிறது. சில காட்சிகள் வேறு படங்களை நமக்கு நியாபக படுத்தினாலும் அதை திரைக்கதையில் சரிகட்டிள்ளார் இயக்குனர் இவ்வளவு பெரிய கதையை விஷாலிடம் கொடுத்ததர்க்கே இயக்குனரை பாராட்ட வேண்டும் . விஷாலுக்கு துப்பறிவாளனுக்கு பின் மீண்டும் ஒரு வெற்றி படமாக இரும்புத்திரை அமையும் என்பதில் சந்தேகமில்லை. மேலும் படத்தில் வரும் சில விஷயங்கள் மக்களை யோசிக்க வைக்கும்.அதை அரசாங்கமும் யோசித்தால் நன்று.திடீர் திடிரென்று பாடலை கொண்டுவராமல் கதைக்கு ஏற்றவாறு கொண்டுவந்தது மிகபெரிய பிளஸ். யுவன்சங்கர்ராஜா மியூசிக் படத்தின் ஒவ்வொரு இடத்திலும் மாஸ். இருப்பினும் வில்லன் செய்யும் அதே வேலையை விஷால் and டீம் வில்லனுக்கு எதிராக அசால்ட்டாக செய்வது சற்று ஏற்றுகொள்ள முடியாதபடி உள்ளது.  சமந்தாவை அழகாய்க் காட்டியதில் தொடங்கி, ரிச்சி ஸ்ட்ரீட்டில் இருக்கும் பரபரப்பு வரை... அத்தனை விஷயங்களையும் அழகாகப் படம் பிடித்திருக்கிறார், ஜார்ஜ். இரண்டாம் பாதிக்குமேல் படு சுவாரஸ்யமாக திரைக்கதை நகர, ரூபனின் எடிட்டிங் ரொம்பவே உதவியிருக்கிறது.படத்தின் இறுதியில் இரண்டாம் பாகத்திற்கும் லீட் கொடுத்து முடித்து இருக்கிறார் இயக்குனர்.ஒருவேளை வந்தால் பார்போம். ஆகமொத்தம் நல்ல படம்.குடும்பத்தோட போய் பாக்கலாம். enjoy பண்ணலாம். மீண்டும் அடுத்த பதிவில் உங்களை  சந்திக்கிறேன் நன்றி வணக்கம்

மீண்டும் சந்திப்போம்-கபில்தேவ்

Post a Comment

أحدث أقدم