தக்ஸ் ஆப் இந்துஸ்தான்-விமர்சனம்
தீபாவளிக்கு வராமல் இரண்டுநாள் தள்ளி இன்று வெளிவந்து இருக்கும் திரைப்படம். அமிதாப்பச்சன்,அமிர்கான்,கத்ரீனா கைப் என பெரிய நட்சத்திர கூட்டணி, விஜய் கிருஷ்ணா ஆச்சார்யா இயக்கத்தில் வெளிவந்து இருக்கும் படம். 300 கோடி செலவில் எடுக்கப்பட்ட படமாம். படம் பார்க்கும்போது 300 கோடி ஏன் செலவு செய்தார்கள் என்பது தெரியவரும்.
1795 காலகட்டத்தில் வெள்ளையர்களை எதிர்த்து போராடும் போராளிகளின் கதைதான். அசார் என்பவரது தலைமையில் உள்ள படை வெள்ளையர்களுக்கு தொடர்ந்து தலைவலியாக அமைய அவர்களை பிடிக்க வெள்ளையர்களால் ஒருவன் அனுப்பபடுகிறான். அவனும் அசார் கூட்டத்தில் சேர்ந்துவிட ஒரு நாள் அவன் வெள்ளையர்களுக்கு வேலைசெய்வது அசார்க்கு தெரியவருகிறது. பின் என்ன நடக்கிறது என்பதை நன்றாக இழுத்து சொல்லி இருக்கிறார்கள். நல்ல கதைதான் இருப்பினும் ஆங்காங்கு ட்விஸ்ட் என்ற பெயரில் வருவது நமக்கு முன்கூட்டியே யூகிக்க முடிகிறது. அமிதாப்பச்சன் அறிமுகம் பார்க்க அருமையாக இருந்தாலும் அதையே கடைசி வரை ஒவ்வொரு முறையும் காண்பிப்பது நெருடலாக இருக்கிறது. ஆமிர்கான் பாத்திரம் நம் ஜாக்ஸ் ஸ்பேரோவை அடிக்கடி நினைவுபடுத்துகிறது.
முதலில் வரும் சண்டைகாட்சியும் சரி அதற்க்கு பின் வரும் சண்டை காட்சியும் சரி ஒரே மாதிரி இருப்பதுபோல் உள்ளது. நமக்குதான் அப்படி தெரிகிறதோ என்னவோ. இசை அருமை. அதையும் மீறி ஒளிப்பதிவு நம்மை கட்டிபோட்டு விடுகிறது. 2 பாடல்கள் 2 காட்சிதான் கத்ரீனா கைப்க்கு. நன்றாக உள்ளது. பாதிமா சனா சண்டைகாட்சிகளில் நன்றாக நடித்துள்ளார். இன்னும் கொஞ்சம் நடித்து இருக்கலாம். பிரம்மாண்டத்தை குறைத்து திரைக்கதையை கொஞ்சம் கவனித்து இருந்தால் இன்னும் நன்றாக இப்படம் இருந்திருக்கும். rating 2.5/5
ஒரு முறை பார்க்கலாம்.\
மீண்டும் சந்திப்போம்
கபில்தேவ்

Post a Comment