Button Text
நம்ம ஊருல ஏகப்பட்ட நூலகம் இருக்கும். எத்தனை பேர் போய் இருப்பாங்கனு தெரியல. ஆனா இப்டி ஒரு நூலகம் இருந்தா கண்டீப்பா யாரும் எட்டி கூட பார்க்க மாட்டாங்க. அப்படி என்ன நூலகம்.? யாரும் நினைச்சி பார்க்க முடியாத அமானுஷ்யமான நூலகம் பற்றிதான் இப்ப நாம பார்க்க போறது.
நீங்க ஒரு நூலகத்துல உட்காந்து புத்தகம் படிச்சிட்டு இருக்கீங்க. நீங்க ஒருத்தர் மட்டும்தான் அங்க இருக்கீங்க. அப்போ யாரோ கத்தும் சத்தம் கேட்குது. யாரோ உங்கள கூப்டற சத்தம் கேட்குது. இப்டி இருந்தா பாதி பேருக்கு பயம் வராது. எரிச்சல்தான் வரும். ஆனா அதே இடத்துல நீங்க படிக்கும்போது உங்க பின்னாடி ஒரு தலை வந்து எட்டிபாக்குது. திரும்பி பார்த்தா யாருமே இல்ல. மறுபடி புத்தகம் படிக்க திரும்பறீங்க. அப்போ நீங்க பார்த்த தலை மட்டும் உங்க முன்னாடி இருக்கற டேபிள் மேல இருந்தா. உங்க reaction எப்படி இருக்கும். அப்டி ஒரு நிகழ்வ அடிக்கடி மக்கள் பார்த்ததா சொல்ற இரு இடம்தான் அமெரிக்காவுல இன்டியனா மாகாணத்தில இருக்கற willard library (நூலகம்) 1875-ல willard carpentar(வில்லார்ட் கார்பெண்டர்)-னு ஒரு பணக்காரர் கட்டின நூலகம் அது. மக்கள் பாரம்பரியத்த மறந்தார கூடாதுன்னு வில்லார்ட் கார்பெண்டர் தவம் கிடந்து யோசிச்சப்போ கனநேரத்தில் அவர் ஞானஉதயத்தில் உருவானது இந்த ஐடியா. ஒரு நூலகம் கட்டலாம் என்று. அதை தனது சொந்த பூங்காவிலையே கட்ட தொடங்குகிறார்.
ஆனால் பாதி கட்டும்போதே வில்லார்ட் கார்பெண்டர் உயிரிழந்து விடுகிறார். அடுத்த ஆண்டே நூலகம் முழுமையாக கட்ட படுகிறது. வில்லார்ட் கார்பெண்டர்க்கு ஒரு மகன் ஒரு மகள் உண்டு. அவங்க என்ன பன்றாங்கனா அந்த நூலகத்த பங்குபோட்டுக்க கோர்ட்க்கு போறாங்க. ஆனா நம்ம ஆளு வில்லார்ட் கார்பெண்டர் ஒரு உயில் எழுதி வச்சி இருக்காரு. அதுல என்னோட சொத்துல பாதி இந்த நூலகதுக்குதான் போகணும்.எப்பவும் மக்களுக்கு இலவசமாகத்தான் இந்த நூலகம் செயல் படனும்னு எழுதி இருக்கு. இதனால மனமுடைந்த மகள் அந்த வேதனைலையே இறந்து போயிடறாங்க. இங்க இருந்துதான் நூலகத்தோட வரலாறு உருவாகுது.
சரியா இது நடந்து 3 வருசத்துக்கு அப்பறம் ஒரு நைட் வாட்ச்மேன் நூலகத்துல நடந்து போறப்போ அவர் பின்னாடி யாரோ வர மாதிரியே அவருக்கு தெரிஞ்சி இருக்கு. மறுபடி மறுபடி அதை அவர் உணர்ந்து அங்க இருந்து ஓடி போயிட்டாரு. அடுத்தநாள் அந்த ஏரியா போலீஸ்காரர்கள் எல்லாரும் அங்க வந்து பாக்கறாங்க. அங்க யாரும் இல்ல. அப்போ அந்த வாட்ச்மேன் சொன்னது. (நான் எப்பவும் நடந்து போகும்போது என் காலடி சத்தம் கூட அவ்வளவா கேட்காது. ஆனா நேத்து என் பின்னாடி யாரோ வந்தாங்க. அவங்க காலடி சத்தம் எனக்கு நல்லா கேட்டது. திரும்பி பார்த்தா யாருமே இல்ல.) என்றார். இது நடந்து ஒரு வாரத்தில் அவர் இறந்துவிட்டார். அதுக்கப்பறம் அங்க வர்ற எல்லாரும் எதாவது ஒரு விதத்துல ஒரு ஆவியா பாத்ததா அடிக்கடி போலீஸ் ஸ்டேஷன்ல பதிவானது. உடனே ஆவிகள விரட்ற பாதிரியார்கள கூட்டிட்டு வந்து அங்க ஆராய்ச்சி செஞ்சப்போ. அங்க ஒரு பெண்னோட ஆவி இருக்கறத எப்டியோ கண்டுபிடிச்சிடாங்க.
அது வில்லார்ட் கார்பெண்டர்ரோட மகள்தான்னு சிலர் சொல்ல சிலர் இல்ல இல்ல இது பல நாளா ஒரு பொண்ணு இங்க புத்தகம் படிச்சிட்டு இருந்ததாகவும். ஒரு நாள் பக்கத்துல இருக்கற ஏரியில விழுந்து அந்த பெண் தற்கொலை பண்ணிகிட்டதாகவும், அந்த பெண்தான் இங்க ஆவியா சுத்தரானும் சொன்னங்க. சிலர் அந்த அந்த ஆவிய அடிக்கடி புத்தகங்கள் இருக்கற இடங்கள்ள உட்கார்ந்து இருந்தானும் சொன்னாங்க. ஆனா இப்போ வரைக்கும் அந்த நூலகம் இடிக்கப்படவில்லை என்பது கொஞ்சம் வேதனைதா. இப்பவும் அங்க போனா அதாவது உள்ள நுழைஞ்சதும் ஒரு வித பயம் நம்மள ஆட்கொள்வதாகவும், நம்மகூட யாரோ இருக்கற மாதிரியும் இருக்கும்னு சொல்றாங்க அது மட்டும் இல்ல ஒரு புத்தகம் வச்ச அடுத்த கொஞ்சநேரத்துலையே அந்த புத்தகம் அங்க இருக்காது. இடம் மாறி இருக்கும்னும் சொல்றாங்க. அதை ஆராய்ச்சி செஞ்சி விளையாடவே பலர் அங்க போறதாகவும் சொல்றாங்க. (இப்போவெல்லாம் யாருக்கும் பேய்னா பயம் இல்லாம போய்டிச்சி. தமிழ் சினிமாவும்,தெலுங்கு சினிமாவும் பண்ற வேலை)உங்க யாருக்காவது அங்க போக ஆசையா இருந்தா நிச்சயம் ஒரு தடவையாவது போயிட்டு வாங்க. அடுத்த பதிவில் சந்திப்போம்.
மீண்டும் சந்திப்போம்
கபில்தேவ்
அமானுஷ்ய நூலகம்-willard library

Post a Comment