Adangamaru movie review

நீண்ட நாட்களாக எதிர்பார்த்த ஒரு திரைப்படம் ஜெயம் ரவி நடிப்பில் இயக்குனர் கார்த்திக் தங்கவேலு இயக்கத்தில்  வெளிவந்து இருக்கும் "அடங்கமறு". மாறுபட்ட கதைகளம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடிக்கும் ஜெயம் ரவிக்கு என் வாழ்த்துக்கள். இதுவும் அப்படி ஒரு படம்தான். கதை கொஞ்சம் பழகிய கதைதான் என்றாலும் அதன் திரைக்கதை அமைத்த விதத்தில் இயக்குனரை பாராட்டலாம்.

one line story:
           SI-யாக பணிபுரியும் சுபாஷ்க்கு ஒரு தற்கொலை கேஸ் கையில் கிடைக்க அதன் பின்னணியை தேட முயற்சிக்கிறார். இதனால் பிரச்சனையில் மாட்டிகொள்ளும் சுபாஷ் தன் குடும்பத்தை இழக்கிறார். குடும்பத்தை கொன்றவர்களையும், தன்ன்னிடம் வந்த தற்கொலை கேஸ்ஸில் மாட்டும் குற்றவாளிகளை அவர் என்ன செய்கிறார் என்பதே இதன் ஒரு வரி கதை.
ஆனால் சொல்ல வந்து இருக்கும் விஷயம், ஒவ்வொரு மனிதனையும் கடந்துசெல்லும் சிலர்க்கு இப்படி ஒரு சம்பவம் ஏற்பட்டு இருக்க கூடும் என்பதை நேராக சொல்லி இருப்பது பாராட்டப்பட வேண்டிய சம்பவம்.
இப்பொழுதெல்லாம் கற்பழிப்பு சாதாரணமாகிவிட்டது என்றே தோன்றுகிறது. 11 வயது குழந்தையை 20 பேருக்கும் மேல் கற்பழிப்பது, 6 வயது குழந்தையை 60 வயது நபர் கற்பழிப்பது. பள்ளிக்கூடத்திலேயே பெண் குழந்தையை கற்பழிப்பது போன்று அன்றாடம் 10 செய்தியாவது வந்து விடுகிறது.
இதனால் அவர்கள் குடும்பம் எவ்வளவு வேதனை படுகிறது என்பது நமக்கு தெரியாது. நமக்கு அது வெறும் செய்தி மட்டுமே. இப்படிப்பட்ட பலருக்காகவே புது சட்டமே விரைவில் கொண்டுவந்தால் நல்லது. தவறு செய்யும் அதிகார வர்கத்தின் ஆணிவேர் சிறு சிறு தவறுகளில் இருந்துதான் ஆரம்பமாகிறது. இந்த கற்பழிப்பு குற்றங்களை  இலைமறை காயாக படத்தில் கொண்டுவந்து உள்ளார் இயக்குனர். அதற்க்கு ஜெயம்ரவி கொடுத்திருக்கும் நடிப்பு  அருமை. தன்னால் எதையும் செய்யமுடியவில்லை என்னும் பொது அவரின் உணர்வு...தன் முன் இறந்துகிடக்கும் தன் குடும்பத்தை பார்த்து அவர் தரும் நடிப்பு, பார்ப்பவர்களுக்கு கடத்துகிறார். நல்ல நடிகர்.
அனல் தெறிக்கும் வசனம்"எந்த பணக்காரனுக்கும் அவன் அப்பன் பேரே தெரியாதா...எப்ப பாத்தாலும் என் அப்பன் யாருன்னு தெரியுமா. அப்பன் யாருன்னு தெரியுமான்னு கேக்றீங்க" போன்ற வசனங்கள் கைதட்டலை பெற தவறவில்லை."வசனம்-விஜி", சிறந்த cinematography இக்கதைக்கு பக்கபலமாக உள்ளது. எடிட்டர் ரூபன் இப்படத்தை 2 மணிநேரம் 20 நிமிடத்திற்கு கச்சிதமாக நேர்த்தியாக எடிட் செய்தது கொடுத்துள்ளார். நடிகை ராஷி கண்ணா படத்திற்கு பொருத்தமான தேர்வு. மற்றும் அழகம்பெருமாள்,சம்பத், ஆகியோர் அருமையான நடிப்பை கொடுத்துள்ளனர். ஆங்காங்கு சின்ன சின்ன லாஜிக் மீறல்கள் இருந்தாலும் அருமையான படம்பார்த்த உணர்வை இப்படம் நிச்சயம் தரும்'  எங்களுடைய rating 3.5/5

மீண்டும் சந்திப்போம்
      கபில்தேவ்

Post a Comment

Previous Post Next Post