2.0 vs AURA(ஆரா)

2.0 திரைப்படத்தில் சொல்லி இருக்கும் சில அறிவியல் சார்ந்த விஷயங்களில் AURA(ஆரா) என்ற ஒன்றும் முக்கியமானது. உண்மையில் AURA(ஆரா) என்றால் என்ன.
சிலர் AURA(ஆரா) என்றால் என்ன என்று சொல்லி இருந்தாலும் உண்மையான விளக்கம் இன்றும் கேள்வியாகவே உள்ளது. குழப்பமடையவைக்கும் ஒன்றாகவே இருந்து வருகிறது. நம் எண்ணங்களின் உருவம் அல்லது எண்ண அலைகளின் பிரதிபலிப்பே ஆரா என நம்பப்படுகிறது. உண்மையாகவா..?
 உதாரணத்திற்கு நீங்கள் உங்கள் வாழ்வில் பார்க்கும் சில விஷயங்கள் இதற்க்கு முன் என்றோ பார்த்தது போல் சட்டென சில வினாடிகளுக்கு தோன்றும். இது ஆராவின் செயல்பாடே. உங்கள் nagitive ஆரா positive ஆரா வாக மாறும்பொழுது. உங்கள் எண்ண அலைகளை அது குழப்பமடைய வைக்கும் அதன் காரணமாகவே அந்த நிகழ்வு அவ்வபோது உங்களுக்கு தோன்றுகிறது.(சத்தியமா புரியல என நீங்கள் சொல்வது புரிகிறது.)
நீங்கள் ஒரு பாட்டை மனதிற்குள் பாடிகொண்டிருக்கும் போது சில நிமிடங்களில் உங்கள் அருகில் இருக்கும் உங்கள் நண்பன் நீங்கள் பாடிய அதே பாடலை அதே வரியை பாடி இருப்பார். இது நிச்சயம் எல்லோர் வாழ்விலும் நடந்திருக்கும். இதுவும் ஆராவின் காரணமாகத்தான் நிகழ்கிறது. ஒவ்வொரு மனிதனுக்கும் அவனது AURA(ஆரா) 3 முதல் 4 அடிவரை இருக்கும்.AURA(ஆரா) இருக்கும் தொலைவு வரை உங்கள் அருகில் யாரவது இருந்தால் அவரது ஆராவும் உங்கள் ஆராவும் connect ஆகி உங்கள் எண்ணங்கள் அவருக்கும் அவரது எண்ணங்கள் உங்களுக்கும் மாறி மாறி பிரதிபலிக்கும். அது positive AURA(ஆரா) மட்டுமே. சிலருக்கு யாரைவது கட்டிபிடித்து அழுதாலோ,அல்லது யாருடனாவது பேசினாலோ அவருக்கு கவலைகள் மறந்து நிம்மதியாக இருப்பார். அது அவரிடம் இருக்கும் nagative AURA(ஆரா). மற்றவருடைய positive AURA(ஆரா) வில் அழிக்கப்படிகிறது. இதனால் கவலை மறக்கபடுகிறது.
இப்பொழுது நீங்கள் ஏதாவது அல்லது யாருடைய இறந்த வீட்டிற்கு சென்றால் உங்களுக்கே தெரியாமல் அந்த வீட்டில் நுழைந்ததும் ஒருவித அமைதி ஆட்கொள்ளும் திடிரென அழுகை வரும் ஏனென்றால் அங்கே இறந்தவரின் nagative AURA(ஆரா) கலந்திருக்கும். அது மற்றவர்களின் positive AURA(ஆரா)-வை விட வலிமை மிக்கதாக இருக்கும்.அது உங்கள் positive AURA(ஆரா)-வை சிறிது முடக்கி வைக்கும். இதன் காரணமாகவே திடீர் அழுகை,அதிர்ச்சி போன்றவை சட்டென இறந்தவரின் வீட்டிற்கு போனால் ஏற்படும். இதுவரை உணரவில்லை என்றால் இனி உணர்ந்து பார்க்கவும். சொந்தத்தில் இறப்பு நேர்ந்தாலோ அல்லது தெரிந்தவர்களின் இறப்புக்கு சென்று வந்த சில நாட்களுக்கு கோவில்க்கு செல்ல கூடாது என்று ஒரு கருத்து உண்டு. அதை சாமியாக பார்பதைவிட அறிவியலாக பார்க்கலாம். ஏன்.? நீங்கள் இறந்தவர்களின் வீட்டிற்கு சென்றுவரும்போது அந்த nagative AURA(ஆரா) உங்கள் positive AURA(ஆரா) உடன் கலந்து இருக்கும் அது வெளியேற சில நாட்கள் ஆகும். நீங்கள் உடனே கோவில்க்கு சென்றால் (கோவிலில் positive AURA(ஆரா) 10 மடங்கு அதிகம் இருக்கும்) அங்கிருக்கும் positive AURA(ஆரா) உங்களை அதிகம் ஆட்கொள்ளும், அந்நேரம் உங்கள் nagative AURA(ஆரா) அதை எதிர்த்தால் உயிருக்குகூட ஆபத்து நேரிடலாம். இதற்குதான் முன்னோர்கள் இப்படி ஒரு விதிமுறையை கடைபிடித்தனர்.(முன்னோர்கள் ரொம்ப புத்திசாலிங்கதான்) ஒருவர் நிறைவேறாத ஆசையுடன் இறந்தாலோ, வெறுப்பில் இறந்து போனாலோ AURA(ஆரா)-க்கள் முழுவதும் அழியாது.நம் விட்டுப்போன எண்ணங்களின் பிரதிபலிப்பாக பூமியில் பூமியில் வாழ்ந்துகொண்டு இருக்கும். ஆனால் இது பலரால் நிருபிக்கப்பட்டாலும். சிலர் ஏற்றுகொள்ள தயாராக இல்லை. 
உங்கள் AURA(ஆரா)வை நீங்கள் பார்க்கலாம். எப்படி? சுற்றிலும் வெள்ளை நிற சுவரின் அருகில் உங்கள் உள்ளங்கையை உயர்த்தி உள்ளங்கை நடுவில் மட்டும் ஒரு புள்ளி அளவில் நீங்கள் பார்க்கும் பொழுது. கை விரல்களை சுற்றி சில வண்ணகளில் ஒளி உண்டாவது தெரியும். சட்டென அதை நன்றாக பார்த்தால் மறைந்துவிடும்.(ஓரகண்ணுளையும் பாக்ககூடாது) முடிந்தால் செய்து பாருங்கள். அதை அறிவியலாளர்கள் AURA(ஆரா)தான் என்று நம்புகின்றனர். வாசகர்களுக்கு ஏதேனும் கேள்வி இருந்தால் email-ல் தெரிவிக்கவும்.

மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம்
                 கபில்தேவ்

Post a Comment

Previous Post Next Post