
OH MY GOD- 10 வருடம் பல சூப்பர் ஹீரோக்கள் நம்மை திரையில் கட்டிபோட்டாலும் அவை யாவும் நமக்கு ரசிக்கும் படியாகவே இருக்கும். அந்த மொத்த சூப்பர் ஹீரோக்கள் ஒன்றாக வரும் படம்தான் Avengers Endgame. ஏதோ ஒரு புள்ளியில் ஆரம்பமான கதை. Ironman மூலம் தொடர்ந்த ஒருகதையின் முடிவு. அழிந்த சூப்பர் ஹீரோக்களை திரும்ப கொண்டுவருவதுதான் படத்தின் கதை என அனைவருக்கும் தெரிந்ததே.
ஆனால் அதை சரியாக மக்களுக்கு கொண்டுவந்த விதத்தில் இயக்குனர்களுக்கு பாராட்டுக்கள். ஒவ்வொரு காட்சியும் அடுத்து என்ன நடக்கும் என்ற வகையிலையே செல்கிறது. தானோஸ் வருகை அருமையான காட்சி. ஆனால் கடைசியில் இயக்குனர்கள் ரசிகர்களை கதறவிட்டுவிட்டனர் என்பதே உண்மை...!

இதுவரை பார்த்த Avengers கதையே நடக்காததுபோல் மாற்றி ரசிகர்களை ஏதோ செய்துவிட்டனர். மறைந்துபோன அனைவரும் திரும்பி வந்தாலும். ஏதோ ஒரு நெகிழ்ச்சி. கடைசி 1௦ நிமிடத்தை என்னால் ரசிக்கமுடியவில்லை.
நாம் பார்த்த Avengers முதல்பாகத்தில் வந்த சூப்பர் ஹீரோக்கள் மூன்று பேரின் சகாப்தம் இதோடு முடிந்துவிட்டது. சந்தோசமாக திரையரங்கிற்கு வந்தவர்கள் போகும்போது சோகமாகவே சென்றனர். ஆனால் படத்தில் சில காட்சிகள் பார்க்கும்போது நிச்சயம் புல்லரிக்கும். கடைசி 30 நிமிடம்தான் மொத்தப்படமும். தோர் மற்றும் caption அமெரிக்கா Action காட்சிகள் Ultimate.
பின்னணி இசை மிரட்டி இருக்கிறது எனலாம். 90'Kids-ன் மனதில் இந்த 10 வருட marvel திரைப்படங்கள் நீங்காத ஒரு இடத்தை பிடிக்கும் என்பதே உண்மை. நிறைய கேள்விகளோடு படத்தை முடித்துஉள்ளனர்.

விரைவில் இப்படத்தைப்பற்றி விரிவாக அலசுவோம்.
மீண்டும் சந்திப்போம்
கபில்தேவ்
Post a Comment