#trending
Time Travel Explain- Come to Other World
Time Travel Explain- Come to Other World


இந்த உலகத்தில் இன்னொரு உலகம் எப்படி? அது எங்கு உள்ளது? எப்படி செல்வது? Time Travel இந்த முறையில்தான் செயல்படுத்த முடியுமா? இப்படி பல கேள்விகள் உண்டு. சில YOUTUBE Channelகளில் டைம் travel செய்து வந்ததாக சிலர் தரும் பேட்டிகள் பதிவிடப்படுகிறது. சில நிரூபிக்கப்பட்டுவிட்டது எனவும் செய்திகள் வெளிவருகிறது. ஆனால் உண்மையில் யாரும் அதை உணர்ந்ததாக தெரியவில்லை. ஒரு வேளை எதிர்காலத்தில் கால இயந்திரம் கண்டுபிடிக்கப்பட்டால். அவைகளைக்கொண்டு இந்த நிகழ்காலத்திற்கு வந்திருபவர்களிடம் அந்த machine இருக்கும். 

அதை ஏன் யாரும் காட்டவில்லை.? இணை பிரபஞ்சமும் இதே போலதான். அவ்வபொழுது கப்பல்கள், விமானங்கள்,ஏன் சில இடங்களில் மனிதர்களே காணாமல் போய் உள்ளனர். அவர்கள் இன்னொரு உலகத்திற்கு போய்விட்டனரா என்றால் அது மிக பெரிய கேள்வி குறிதான். 

பெர்முடா முக்கோணம் போன்ற சில இடங்கள் இன்னொரு உலகத்திற்கான நுழைவாயில் என சொல்லபடுவதுண்டு. இந்த பால்வெளி அண்டத்தில் கோடிகணக்கான கோள்கள் உருவாகி உள்ளன. அதில் ஒவ்வொரு கோளுக்கு அருகிலும் அவற்றின் துணைகோள்கள் இருக்கின்றன. அவைகள் ஒன்றோடன்று மோதும்போது ஒட்டிக்கொள்ளும் நிகழ்வு ஏற்படுகிறது. அதனால் bubble போன்ற நிகழ்வு ஏற்பட்டு பல பிரபஞ்சங்கள் உருவாகின்றன. 

அவைகளின் நுழைவாயில்கள் நமபிரபஞ்சங்களில் தானாக அமைக்கபடுகின்றன.! அந்த நிகழ்வு நம் பூமி யிலும் உள்ளது என அறிவியலாளர்கள் ஒரு கருத்தை முன்வைக்கின்றனர். இணை பிரபஞ்சங்களுக்குள் சென்றால் அவை நம் காலத்தை copy அடித்ததுபோல் இருக்காது. அதில் காலம் மாறுபடும். அதை கண்டறிவதன்மூலம் காலபயணம் சாத்தியமாகிறது. 100 ஒளிவேகத்தில் சென்றால் கால நிலையில் ஒரு வெற்றிடம் ஏற்பட்டு அவை இன்னொரு பிரபஞ்சதிற்கு செல்லும் நுழைவாயிலை ஏற்படுத்தும். இதன் மூலம் காலத்தின் எந்த இடத்திற்கு வேண்டுமானாலும் செல்லலாம்.

ஆனால் அப்படி சென்றால் மனிதன் உயிரோடு இருக்க வாய்ப்பில்லை. நம் உடல் சில குறிப்பிட்ட வேக விசையை மட்டுமே தாங்கும் திறனுடையவை. அதில் 1 ஒளிவேகம் பயணம் செய்தாலே உறுப்புகள் செயலிழக்க வாய்ப்புள்ளது.! ஆனால் நுழைவாயில்கள் தானாகவே சில இடங்களில் உருவாகின்றது. 

முன்பு சொன்ன பர்முடா முக்கோணம் இதில் ஒன்று(உண்மையில் இன்னும் அது நிரூபிக்க படவில்லை) தஞ்சாவூரில் கூட இப்படி ஒரு வாயில் உண்டு என்று ஒரு கூற்று உண்டு.! சில நேரங்களில் கடலுக்கு அடியிலும் வாயில்கள் ஏற்படுகின்றன. விரைவில் இதற்கான விடைக்காக காத்திருப்போம்.
மீண்டும் சந்திப்போம்
கபில்தேவ்
Post a Comment