2.0-விமர்சனம் 

வணக்கம். உலகம் முழுக்க அதீத எதிர்பார்ப்பில் வெளியாகி இருக்கும் திரைப்படம் 2.0. 2D மற்றும் 3D யில் வெளியாகி இருக்கும் இத்திரைப்படத்தின் மொத்த செலவு 560 கோடியாம், படத்தில் நடித்தவர்கள் வேலைபார்த்தவர்கள் என இவர்களுக்கே 300 கோடி காலி ஆகி இருக்கும். சரி படம் எப்படி உள்ளது.?
இதற்கு முன் வந்த ஷங்கர் படங்களை ஒப்பிடும்போது இது அவரின் ஒட்டுமொத்த உழைப்பின் அடையாளம் என சொல்லலாம். நல்ல கதை ஆனால் அதை சின்னதாக சொல்லிவிட்டு வெறும் பிரம்மாண்டம்,VFX ஆகிய இரண்டு மட்டும் அதிகம் பயன்படுத்தப்பட்டு உள்ளது.
கதை oneline:
       அழிந்து வரும் பறவை இனத்தை எதிர்த்து போராடும் ஒருவருக்கு நியாயம் கிடைக்காமல் போக.அவர் தற்கொலை செய்துகொள்கிறார். பின் அவர் ஆவி CELLPHONEக்குள் ஊடுருவி அழிவை ஏற்படுத்துகிறது.அதை எதிர்த்து போராடும் விஞ்ஜானி மற்றும் ரோபோ. என்ன ஆகிறது என்பதை திரைக்கதையில் கச்சிதமாக தந்திருக்கிறார். ஆனால் ஆஹா ஓஹோ கொண்டாடுவது கொஞ்சம் ஓவர். ரஜினிகாந்த் என்ற பிம்பத்தை தவிர்த்து யார் நடித்திருந்தாலும் இவ்வளவு எதிர்பார்ப்பு இருக்குமா என்பதே சந்தேகம்தான். ஏனென்றால். சில VFX காட்சிகள் பாதியிலையே விட்டதுபோல் தெரிந்தது இதன் மைனஸ். ஆனால் பல இடங்களில்  VFX காட்சிகள் நன்று.
spoiler Alart:
           ஒரு விஞ்ஜானி சட்டென ஒரே இரவில் ரோபோவை தயாரிப்பது கொஞ்சம் ஓவர்.(என் friend இதுக்கு ஒரு வார்த்தை சொன்னான். சூப்பர் ஸ்டார் தயாரிப்பாரு.பாத்தல்ல).அதுமட்டும் இன்றி 2,3 நாட்களிலேயே நூற்றுகணக்கான ரோபோவை இரண்டு ரோபோ இணைத்து தயாரிப்பது. கொஞ்சம் நெருடலாக இருந்தது.  இது ஆவி பற்றின படமா..? இல்லை அறிவியல் பற்றின படமா..? இல்லை SPACE research பற்றின படமா..? என்று கடைசி வரை ஒரு கேள்வி. 3D என்ற ஒரு தொழிற்நுட்பத்தை  மட்டுமே நம்பி படத்தை வெளியிடுவது தவறு. 2 மணிநேரம் மட்டும் படத்தை குறைத்து இருந்தால் நன்றாக இருந்து இருக்கும். அங்கேயே CLIMAX இருக்கிறது. ஆனால் மீண்டும் அரைமணி நேரம் இன்னொரு கிளைமாக்ஸ்காக செலவு செய்து உள்ளனர். பல காட்சிகள் படத்தில் இருந்து தூக்கி இருப்பது நன்றாக தெரிகிறது.
வசனங்கள் சில இடங்களில் அருமையாக உள்ளது. மியூசிக் தனித்து தெரியாத வண்ணம் AR. ரஹ்மான் நன்றாக வேலை செய்துள்ளார். தமிழ்நாட்டில் இருந்து இப்படி ஒரு படம் வருவது அரிது.அந்த வகையில் ஷங்கர்-யை பாராட்டலாம். ஒரு பாடலுக்கு நன்றாக செலவு செய்து அதை எங்கே வைப்பதென தெரியாமல் படத்தில் முடிவில் வைத்தது ஏன். என ஒரு கேள்வி.? இதற்கே 10-15 கோடி செலவாகி இருக்கும் போல. கடைசியில் இன்னொரு surprise உள்ளது. அது ஓகே ரகம்தான் என்றாலும் அது குழந்தைளுக்கு பிடிக்கும். அந்த surprise எதற்கு எனவும் ஒரு காரணம் படத்தில் உண்டு. அதை வைத்து படத்தை முடித்து உள்ளனர். அடுத்த பாகம் வந்தால் நன்றாக இருக்கும். ஆனால் கொஞ்சம் செலவை குறைக்கலாம். இவ்வளவு பிரம்மாண்டம் தேவை இல்லை என பலரின் கருத்து. 3D-யில் பார்க்க படம் சற்று அழகாக உள்ளது. ஆனாலும் ரஜினிகாந்த்-அக்ஷய் குமார் என்ற இருவரையும் மட்டும் marketing-ஆகா வைத்து எடுக்கப்பட்டது மறுக்க கூடாது. சொல்ல வந்த செய்தி அருமை. படம் வெற்றி பெற வாழ்த்துக்கள். எங்களுடைய RATING-3.5/5

மீண்டும் சந்திப்போம்
கபில்தேவ் 

Post a Comment

Previous Post Next Post