2019-ஜனவரி 10 அமோகமாக வெளியாகி இருக்கும் சூப்பர்ஸ்டார் திரைப்படம். "பேட்ட" எக்கசக்க எதிர்பார்ப்பு...விஜய் சேதுபதியும்,பாபிசிம்ஹாவும்,சசிகுமார்ம் இணைந்து நடித்திருக்கும் படம். த்ரிஷா,சிம்ரன் வேறு, கார்த்திக் சுப்புராஜ் இயக்கம்,sun pictures தயாரிப்பு.அடேங்கப்பா. எதிர்பார்த்த அளவு படம் உள்ளதா..?

(one line story)
             மாணவர்களை திருத்த வரும் ஒரு ஹாஸ்டல் வாடர்ன். அவருக்கு பின் இருக்கும் பழிவாங்கும் உணர்வு. இதுதான் கதை.

Than:
              நீண்ட வருடங்களுக்கு பிறகு பழைய ரஜினிகாந்த்தை திரையில் பார்த்த அனுபவம்.i thing எந்திரன் படத்தோட நம்ம பழைய superstar காணாம போய்ட்டாரு. ஆனால் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் ரஜினிகாந்த்காகவே இப்படி ஒரு கதையை எழுதி உள்ளார். இல்லை இல்லை கொஞ்சம் கொஞ்சம் மட்டும் எழுதி உள்ளார்.(எந்த படத்தோட copy னு கடைசியா சொல்றேன்.)
முதல் அறிமுக காட்சிக்காவே இப்படத்தை பார்க்கலாம். BGM உடன் அறிமுகமாகும் ரஜினிகாந்த் அப்படி ஒரு மாஸ் என்ட்ரி. அதன் பின் முழுக்க முழுக்க ரஜினிகாந்த் கைவசம்தான் முழு படமும். ரசிகர்களை கட்டி போட வைக்கும் நடிப்பு.சுருக்கமா சொன்ன மரணமாஸ். அடுத்து விஜய் சேதுபதி....எப்பவும் போல நல்ல நடிப்பு. இருந்தாலும் சில இடங்கள்ள வேதா சேதுபதி மறுபடி வர்றார். சிம்ரன் இன்னும் பாக்க அப்டியே இருக்காங்க.  முதல் பாதி மாஸ் என்றால் இரண்டாம் பாதி கிளாஸ். இடைவேளை காட்சி ஒன்று போதும் இரண்டாம் பாதியை பார்க்க வைக்க. ஆனால் அதற்க்கு பின் பார்வையாளர்களை இயக்குனர் வைத்து செய்துள்ளார்.
இதுவரைக்கும் ரஜினி படம் இனிமே கார்த்திக் சுப்புராஜ் படம் என்ற வகையில் கடைசி 1 மணி நேரம்(மக்கள் மேல அப்படி என்ன கோபம்) த்ரிஷாவிற்கு சின்ன ரோல்தான்.இருந்தாலும் முகம் காட்டியே வந்துபோகிறார். சசிகுமார் சூப்பர். FLASHBACK முடிந்து கொஞ்சம் மெதுவாக பயணிக்கிறது கதை.
ரொம்ப நேரமா படம் பாத்துட்டு இருக்கமேங்கர பீலிங். இருந்தாலும் கதையை எங்கெங்கோ சுற்றி வளைக்காமல்.நேராக கிளைமாக்ஸ்க்கு கொண்டுவந்து விடுகிறார். இதுக்குதான் இவ்வளவா என சொல்லும் இறுதிகாட்சி பரவால. superstar இரண்டு நிமிடம் வில்லனாக எடுக்கும் அவதாரம் அருமை. ட்விஸ்ட்ங்கற பேருல நம்ப முடியாத காட்சிகள்.
இருந்தாலும் பழைய superstar ரஜினிகாந்த்யை மீண்டும் பார்த்ததில் மகிழ்ச்சி. பாபி சிம்ஹா நல்லா பண்ணியிருக்கார். அவ்வளவுதான். cinematographer திரு ஒவ்வொரு FRAME-ம் பாத்து பாத்து வச்சி இருக்கார். எடிட்டிங் நன்று. அனிருத் பற்றி என்ன சொல்ல. நல்லா இருக்கு. அதுக்குனு படம் முழுக்க ஒரே மியூசிக்கா?
அந்த சுட்ட படம் என்னனா? லிஸ்ட் போடலாம்.
முதல் பாதி-"நம்மவர்" கொஞ்சம் " ஸ்கூல் of ராக்" hollywood movie கொஞ்சம்

இரண்டாம் பாதி-"கொஞ்சம் சிம்புவின் சரவணா,கொஞ்சம் விஜயின் ஆதி,கொஞ்சம் ஜிகர்தண்டா

   மொத்தமா சொல்ல வரல.அதுல அதுல கொஞ்சம் கொஞ்சம் எடுத்து ரஜினிகாந்த் நடிச்சா எப்படி இருக்குமோ அப்டி.! படத்த திரும்ப பாருங்க புரியும். இருந்தாலும் நல்ல பொழுதுபோக்கு திரைப்படம். RATING 3.7/5

மீண்டும் சந்திப்போம்
          கபில்தேவ்

Post a Comment

أحدث أقدم