உண்மையாகவே டைனோசர்கள் அழிந்தது  எப்படி?


டைனோசர்கள்! இந்த பேரை கேட்டால் உங்களுக்கு என்ன தோன்றும். சட்டென ஒரு திரைப்படம் நினைவில் வரும். உலகிலையே மிக பெரிய விலங்கு அது. சரி அது எப்பொழுது எப்படி அழிந்தது என்பது இன்றுவரை மிகபெரிய மர்மம்தான்.
டைனோசர்கள் அழிந்ததற்கு நிறைய கட்டுகதைகள் உண்டு. அதில் எத்தனை உண்மை என்பது தெரியாது! மிக பெரிய விண்கற்கள் பூமியில் மோதி அதனால் அந்த விலங்கு அழிந்தது எனவும், ஒரு கட்டத்திற்கு மேல் பூமி வெப்பமாதலை அதனால் தாங்கமுடியவில்லை அதனால் கொஞ்சம் கொஞ்சமாக இறந்துவிட்டது எனவும், பசியினால் தன் இனத்தை தானே அழித்துவிட்டது எனவும். இப்படி பல கருத்துக்கள் உண்டு.
ஆனால் இவைகளில் எது உண்மை எது பொய் என்பது நிரூபிக்கப்படவில்லை. எங்காவது எப்பொழுதாவது ஒரு தடயம் கிடைக்கும் பல லட்சம் வருடங்களுக்கு முன் வாழ்ந்தது என சொல்ல வருவதற்குள் இன்னொரு தடயம் சில கோடி ஆண்டுகள் வாழ்ந்தது என ஒவ்வொரு முறையும் ஒரு கூற்று நிலவிக்கொண்டு உள்ளது. இது சரியா. ? உண்மை என்ன. 90% உண்மை என்று சொல்லும் சில கூற்றுகளை பார்போம்.

பூமியின் பெரு வெடிப்பு காரணமாக பூமியில் முதல் உருவான செல் உயிரினம் 3 இருக்கிறது.அதில் ஒன்று அமீபா. அதன் பின் சில உயிரினங்கள் தோன்றினாலும்.அவை யாவும் நீண்ட நாட்கள் இருக்க வில்லை. கிட்டத்தட்ட 6.5 கோடி வருடங்களுக்கு முன் தோன்றிய ஒரு இனம் டைனோசர்கள். அது டைனோசர்கள் காலகட்டம் என்றே பிரிக்கிறார்கள். பல வகைகள் இருந்தாலும் உண்மையாகவே இது வாழ்ந்தது என்று சொல்லப்படுவது 27 வகை டைனோசர்கள் மட்டுமே.(பெயர்களை அடுத்த பதிவில் பார்போம்)
அந்த காலகட்டத்தில் அதோடு வாழ்ந்த சில உயிரினங்களில் உலகின் முதல் முழுநீள பாம்பான டைனோபோவாவும் வாழ்ந்தது.(இதை பற்றியும் அடுத்த பதிவில் பார்போம்.) சரி டைனோசர்கள் எப்படி அழிந்தது.

டைனோசர்கள் வாழ்ந்த காலத்தில் மனிதர்கள் வாழ்வதற்கான தட்பவெப்ப நிலை சீராக இல்லை. அந்த காலகட்டத்தில் மனிதன் என்ற உயிரினம் தோன்றக்கூட இல்லை. தன் இரையை தேடி அப்பொழுதே அதை தின்றுவிடும்.சேமிக்கும் பழக்கம் இல்லை. ஒரு வகையான டைனோசர்கள் மற்ற இன டைனோசர்களின் குட்டிகளை மற்றும் முட்டைகளை தின்று உயிர்வாழ்ந்தன. வெப்பநிலை குறைந்த அளவு இருந்த நேரம் அது. வருங்கால நிகழ்வை அவைகள் அறிந்திருக்கவில்லை. போக போக வெப்பநிலை மாற்றமும்,கால மாற்றமும் நிகழ நிகழ டைனோசர்கள் வாழமுடியாத நிலை உருவானது.
சில டைனோசர்கள் வேறு இடம் தேடி ஓடின. சிலது பாறைகளுக்குள் சென்றுவாழ ஆரம்பித்தது. மீதி இருந்த இனம் கொஞ்சம் கொஞ்சமாக மடிந்துகொண்டே வந்தன. கால நிலை மாற்றத்தால் வேற சில விஷ ஜந்துக்கள்,பூச்சிகள் உருவாக தொடங்கின. அவை டைனோசர்கள் இடத்தை ஆக்கிரமிக்க தொடங்கி டைனோசர்கள் இனத்தை கொஞ்சம் கொஞ்சமாக வேட்டையாட தொடங்கின. நான் சொன்ன அந்த டைனோபோவா பாம்பும் இதில் சேரும்.அவை குட்டி டைனோசர்களை உணவாக எடுத்துகொண்டன. அந்நேரம் விஷங்கள் பொருந்திய செடிகள் உருவாகிக்கொண்டு இருந்தன.டைனோசர்கள் வாழும் இடங்களில் ஆங்காங்கு ஒரு சில செடிகள் இருக்கும். உணவோடு உணவாக அவைகளை எடுத்துக்கொண்ட டைனோசர்கள் காலபோக்கில் இறந்துபோயின.
உறைபனி காலங்களில் பனிக்கட்டி நீராக மாறியதால் தகுந்த காலம் அதற்க்கு தென்படவில்லை. போக போக. அதிக வெப்பமயமாதலை அதனால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. ஆங்காங்கு சில எரிகற்கள் விழ ஆரம்பித்தன. அதிலும் சில இனங்களின் முட்டைகள்,அழிந்திருக்கலாம். கிட்டத்தட்ட 2 லட்சம் ஆண்டுகளுக்கு பின் அவைகள் மொத்தமாக இல்லாமல் போய் விட்டன. பூமியோடு அவை ஒன்றி போய்விட்டன.
அவ்வபொழுது டைனோசர்களின் எலும்புக்கூடுகள் கிடைக்கின்றன. அவைகளை ஆராய்ச்சி செய்யும் ஆராய்ச்சியாளர்கள்.அவை எந்த காலகட்டத்தில் வாழ்ந்தன எப்படி அழிந்தன என்று எதையும் குறிப்பிட்டு சொல்லமுடியவில்லை. சமிபத்தில் டைனோசர் DNA கிடைத்துள்ளது எனவும் டைனோசர்களை மீண்டும் உயிர்பிக்க முடியும் எனவும் தெரிவித்துள்ளனர்.
எனது கேள்வி எல்லாம் ஒன்றுதான். ஒரு மிக பெரிய விலங்கு....உலகின் சரித்திரமாகும் அளவிற்கு வாழ்ந்த ஒரு இனம். எப்படி மிச்சம் இல்லாமல் அழிந்து போனது. இந்த பூமியில் இன்று ஏதோ ஒரு இடத்தில அவைகளின் இனம் வாழ்ந்துகொண்டு இருக்காதா.? ஒரு வேளை அதை மீண்டும் உயிர்பித்தால் அவை எப்படி அழிந்திருக்கும் என்பதற்கு விடை கிடைக்குமா.? தெரியாத வரை நல்லது டைனோசர்களுக்கு. நமக்கும்தான்

மீண்டும் சந்திப்போம்
          கபில்தேவ்

Post a Comment

أحدث أقدم