ஜெர்ஸி-மீண்டும் ஒரு கிரிக்கெட் படம்

கிரிக்கெட் பற்றிய படங்கள் விரல் விட்டு எண்ணி விடலாம். ஜீவா,MS.தோனி,சென்னை 28 போன்ற திரைப்படங்கள். வசூலிலும் வெற்றி பெற்றது. அந்த வெற்றிப்படங்களின் வரிசையில் தெலுங்கில் நானி(நான் ஈ பட நாயகன்) நடித்து கெளதம் இயக்கத்தில் அனிருத் இசையில் 19-ஏப்ரலில் வெளியாகி இருக்கும் படம் ஜெர்ஸி.
கிரிக்கெட் வேண்டாம் என்று இருக்கும் ஒருவரது வாழ்க்கையில் மீண்டும் கிரிக்கெட் வந்தால் என்ன ஆகும் என்ற ஒரே வரி ஆனால் கதை இது மட்டும் அல்ல. விளையாட்டை மட்டும் மையப்படுத்தி சில படங்கள் வெளிவரும் அதில் புதிதாக ஒரு கதையை இணைத்து புதிதாக சொல்கிறேன் என்று கண்டபடி குழப்பி வைத்து விடுவார்கள் சிலர்.
ஆனால் ரசிக்க கூடிய கதையில் விளையாட்டையும் இணைத்து சொல்லி இருக்கும் இயக்குனருக்கு பாராட்டுக்கள்.! நானி மட்டும் இன்றி படத்தில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரமும் கதையை நகர்த்த உதவியுள்ளனர்.! என்னதான் சில படங்களின் சாயல்கள் நினைவுக்கு வந்தாலும். படத்தில் அவை பெரிதாக தெரியவில்லை.! அனிருத்தின் பின்னணி இசை சில இடங்களில் இத எங்கயோ கேட்டு இருக்கமே இன்னும் நினைவு. நானி தன் துள்ளலான நடிப்பை இதில் கொஞ்சம் குறைத்து அடக்கி வாசித்துள்ளார்.!
ஒவ்வொரு பிளேயர்ம் வரிசையாக விளையாட அழைக்கப்பட்டு ஒருகட்டத்தில் நானி விளையாட செல்ல. ஏய் நீ வேணா உக்காரு என கோச் சொல்ல. அந்நேரத்தில் நானி வெளிபடுத்தும் உணர்ச்சி மற்றும் முகபாவனை அருமை. நானி சிறந்த நடிகர்தான். தன் மகனிடம் நான் கிரிக்கெட் விளையாட போகட்டுமா வேண்டாமா என கேட்க. நீ போ. நீ விளையாடினால் எனக்கு ஹீரோவாக தெரிகிறாய் என சொல்லும்போது நானியின் நடிப்பு- நானி ஞானி.
கிளைமாக்ஸ் பதட்டமும்,அதற்க்கு பின் வரும் திருப்பமும் நம்மை நெகிழ வைக்க தவறவில்லை. சத்யராஜ் சிறப்பான கதாபாத்திரம். சில இடங்களில் காட்சியின் நீளத்தை குறைத்திருக்கலாம். ஹீரோயின் எப்படிபட்டவர் என்ற குழப்பம் ஆங்காங்கு வந்துபோவதை தவிர்க்க முடியவில்லை.
CINEMATOGRAPHAR சொன்ன வேலையை மட்டும் செய்துள்ளார் என்பது நன்றாக தெரிகிறது. விளையாட்டில் நல்ல Ediiting. சில காட்சிகளை புதிதாக யோசித்து இருக்கலாம். இருந்தாலும் நன்று. கிரிக்கெட் விரும்பிகள் நிச்சயம் பார்க்க வேண்டியபடம். அவர்களை தவிர இந்த படத்தை பார்க்கும் அனைவருக்கும் இந்த படம் ஒரு பாடம் புகட்டும்.! RATING 4.5/5

மீண்டும் சந்திப்போம்
கபில்தேவ்

Post a Comment

أحدث أقدم