சிறிது நாட்களுக்கு முன் சினிமா பற்றிய ஒரு பதிவு எழுதி இருந்தேன். அதில் சினிமா புதிய பாதையில் பயணித்தால் நல்லது என ஒரு கருத்தை தெரிவித்திருந்தேன்.நல்ல கதை அம்சமுள்ள படங்கள் வரவு அதிகமானால் தமிழ் சினிமா உலக சினிமா அளவிற்கு நிச்சயம் பெயர் பெரும். சரி இது விவாதம் அல்ல. சமிபத்தில் இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் அருண்விஜய் நடித்த படம் "  தடம்" வெளியாகி நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறது. கிட்டத்தட்ட ராட்சசன், துருவங்கள் பதினாறு பட வரிசையில் கச்சிதமான ஒரு திர்ல்லர் திரைப்படம். நானெல்லாம் பல சஸ்பென்ஸ் திர்ல்லர் பாத்தவன்டா என சொல்லுபவர்களுக்கு இந்த படம் வேறு ஒரு அனுபவத்தை தரும் என்பதில் துளியும் சந்தேகம் இல்லை.

ஒரு கொலை நடக்கிறது அதை யார் செய்தார்கள் என்பதே oneline கதை. ஆனால் திரைக்கதையில் திறமையை காட்டி பார்வையாளர்களுக்கு SHEET EDGE- காட்சிகளை தந்துள்ளார் இயக்குனர்.
ஒவ்வொரு காட்சியும் இதுவாக இருக்குமோ இதுவாக இருக்குமோ என யோசிக்க யோசிக்க என்னதான் யோசிச்சாலும் அது இல்லடா என தலையில் தட்டி வேறு வேறு பாதையில் படம் பயணிக்கிறது. ஆங்கிலத்தில் சில கொலைகள் சார்ந்த திரைப்படங்கள் அவ்வபோது வெளிவந்து கொண்டுதான் உள்ளது. ஆனால் சில படங்கள் மட்டுமே என்றுமே சினிமாவில் நிரந்தர இடத்தை பிடிக்கும். மற்ற மாநில ஆட்கள் பார்த்தாலும் ரசிக்க கூடியதாக இருக்கும். எனக்கு தெரிந்து சில தமிழ் படங்கள் உள்ளன.
                
மூடுபனி,ஜூலி கணபதி, புரியாத புதர்,விசில் போன்ற சில படங்கள். இந்த படங்கள் எப்பொழுது பார்த்தாலும் ரசிக்க கூடியதாகவும் அடுத்து என்ன நடக்கும் என யோகிக்க முடியாமலும் இருக்கும். துருவங்கள் பதினாறு, ராட்சசன் படங்களும் அப்படியே அந்த வகையில் அந்த படங்களின் வரிசையில் இந்த தடம் படமும் நிச்சயம் இடம் பெரும். தவறாமல் பார்க்கவும். ஒரு rating தரணும்னா நான் 4.5/5 தருவேன்
நன்றி

மீண்டும் சந்திப்போம்
கபில்தேவ்

Post a Comment

أحدث أقدم